darbar
  • January
    19
    Sunday

Main Area

Main



போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம்: வீடியோ!


கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அத்துடன் அங்கு வந்த பெண்களை மலை மீது ஏறவிடாமல் அவர் போராடினர். இதனால் சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 16-ம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன்  கோயில் நடை கடந்த 27ம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் மகரபூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன்  கோவிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் மாலை அணிந்து இருமுடி கட்டுடன் அதிகாலை 3.45 மணிக்கு 18படி ஏறாமல் கோவில் பின்புறம் வழியாகச்  சன்னிதானத்தை அடைந்தனர். இதையடுத்து  அவர்கள் சீருடை அல்லாமல் சாதாரண உடை அணிந்து வந்த காவல்துறையினர்  பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். 

பல்வேறு போராட்டங்கள், தடைகளைத் தாண்டி பெண்கள் இருவர் சாமி தரிசனம் செய்துள்ளது கேரள  மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.