கோவை அருகே குளத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள்… வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

 

கோவை அருகே குளத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள்… வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

கோவை

கோவை போளுவம்பட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், அங்குள்ள குளத்தில் இறங்கி ஆனந்த குளியளிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த செம்மேடு பகுதியில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை வெளியேறிய 2 ஆண் யானைகள், அங்குள்ள முள்ளங்காடு குளத்தேரி குட்டையில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தன.

கோவை அருகே குளத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள்… வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

நீண்ட நேரமாக யானைகள் குளத்தில் இருந்து வெளியேறாததால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, 3 குழுக்களாக பிரிந்து, யானையை கண்காணித்து வரும் வனத்துறையினர் இன்று மாலைக்குள் யானைகளை வனப்பகுதிகள் விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்டையே, நேற்று இரவு 2 காட்டு யானைகள், குளத்திற்குள் நுழைய முயன்ற நிலையில், அவற்றை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் துரத்தி விட்டதால் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.