“மேலும் 3 மாதங்களுக்கு ரூ.2000 நிவாரண தொகை” : ஸ்டாலினுக்கு விசிக கோரிக்கை!

 

“மேலும் 3 மாதங்களுக்கு ரூ.2000 நிவாரண தொகை” : ஸ்டாலினுக்கு விசிக கோரிக்கை!

கொரோனா நிவாரண நிதியை திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என எம்.பி.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மேலும் 3 மாதங்களுக்கு ரூ.2000 நிவாரண தொகை” : ஸ்டாலினுக்கு விசிக கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக ரூ.4000 கொரோனா நிவாரண தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் ரூபாய் 2000 முதல் தவணையாக அளிக்கப்பட்டது. ரேஷன் கடைகளின் மூலம் இந்த தொகை அளிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 இந்த மாதம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் வேலையின்றி வறுமையில் வாடும் மக்கள் பயனடைந்துள்ளனர்.

“மேலும் 3 மாதங்களுக்கு ரூ.2000 நிவாரண தொகை” : ஸ்டாலினுக்கு விசிக கோரிக்கை!

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், “மாதம் 2 ஆயிரம்- மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டும்.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வருமானத்தை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மீட்பதற்கு நேரடியாக அவர்கள் கையில் உதவித்தொகையை வழங்குவதே சிறந்ததெனப் பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். அதற்கேற்ப ஆட்சிப் பொறுப்பேற்றதும் மே ஜூன் மாதங்களில் மாதம் 2 ஆயிரம் என 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். வாழ்வாதாரம் இழந்தோருக்கு அது பேருதவியாக உள்ளது.இன்னும் கொரோனா பேராபத்து விலகாத நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.