தொடர் மழை எதிரொலி- பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

தொடர் மழை எதிரொலி- பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

திருவள்ளூர்

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர் மழை எதிரொலி- பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் விளங்கி வருகிறது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி, சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக நிரம்பிய நிலையில், தற்போது 3 ஆயிரத்து 136 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

தொடர் மழை எதிரொலி- பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

தற்போதைய நிலவரப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 632 கனஅடி நீரும், மழைநீர் மற்றும் வரத்து கால்வாய்கள் மூலம் வினாடிக்கு ஆயிரத்து 300 கனஅடி என மொத்தம் ஆயிரத்து 932 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் 2 ஆயிரம் கனஅடி நீரை முழுமையாக வெளியேற்றி வருகின்றனர்.