செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால், பிளஸ் 2 மாணவர் தற்கொலை!

 

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால், பிளஸ் 2 மாணவர் தற்கொலை!

கோவை

கோவையில் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததல், பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை வீரியம்பாளையத்தில் வசித்து வருபவர் புனிதவள்ளி. தனியார் கல்லூரி ஊழியர். இவரது மகன் நிதின்ராம் (17). இவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நிதின்ராம் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனை, தாய் புனிதவள்ளி கண்டித்தும், கேம் விளையாடுவதை கைவிடாமல் இருந்துள்ளார்.

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால், பிளஸ் 2 மாணவர் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு சென்ற புனிதவள்ளி, நிதினை செல்போனில் தொடர்பு கொண்டு அவர் மீது புகார் தெரிவிப்பதற்காக, வகுப்பு ஆசிரியரின் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நிதின் அழைப்பை துண்டித்து உள்ளார். மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால், பக்கத்து வீட்டில் இருந்தவர்களை சென்று பார்க்கும்படி புனிதவள்ளி தெரிவித்துள்ளார்..

இதனை அடுத்து, அவர்கள் உடனடியாக சென்று பார்த்தபோது வீட்டில் நிதின் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.