சாத்தான்குளம் விவகாரம்: அம்மாவின் உடல்நிலை சரியில்லை! தந்தை, சகோதரனின் உடல்களை பெற்றுக்கொண்ட மகள்!!

 

சாத்தான்குளம் விவகாரம்: அம்மாவின் உடல்நிலை சரியில்லை! தந்தை, சகோதரனின் உடல்களை பெற்றுக்கொண்ட மகள்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிகேட்டு பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக விசாரிக்க முன்வந்துள்ளது. மேலும் தமிழக காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாத்தான்குளம் விவகாரம்: அம்மாவின் உடல்நிலை சரியில்லை! தந்தை, சகோதரனின் உடல்களை பெற்றுக்கொண்ட மகள்!!

இந்நிலையில் சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அம்மாவின் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் தந்தை, சகோதரன் உடல்களை பெறுவதாகவும், உயர்நீதிமன்ற கிளை நேரடியாக விசாரிப்பதால் கிடைக்கும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் உயிரிழந்த ஜெயராஜ் மகள் பெர்சி தெரிவித்துள்ளார்.