பழச்சாற்றில் மது வகைகளைக் கலந்து மண் பானையில் போட்டு காய்ச்சி விற்ற இருவர் கைது!

பழச்சாற்றில் மது வகைகளைக் கலந்து மண் பானையில் போட்டு காய்ச்சி விற்ற இருவர் கைது!

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால், தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் ஆயிரக் கணக்கில் கைது செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது.

பழச்சாற்றில் மது வகைகளைக் கலந்து மண் பானையில் போட்டு காய்ச்சி விற்ற இருவர் கைது!

இந்நிலையில் சென்னை ஸ்ரீராம் நகர் முதல் தெருவில் உள்ள வீட்டில் மதுபானங்கள் வீட்டிலேயே தயார் செய்து விற்பதாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

பழச்சாற்றில் மது வகைகளைக் கலந்து மண் பானையில் போட்டு காய்ச்சி விற்ற இருவர் கைது!

அப்போது அங்கு வாடகை வீட்டில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் பழச்சாற்றில் மது வகைகளைக் கலந்து மண் பானையில் போட்டு காய்ச்சி அவற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குற்றத்திற்கு வீட்டின் உரிமையாளர் வெற்றிவேலுவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மது பானங்களையும் பறிமுதல் செய்தனர்.