அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் : 9 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு!

 

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் : 9 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து டெங்கு பாதிப்பு தலைதூக்கியுள்ளது. நெல்லையில் ஒரு சிலருக்கு முதலில் டெங்கு பாதிப்பு பரவியதைத் தொடர்ந்து தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு வேகமாக பரவியது. நெல்லையில் தற்போது 6 பேர் டெங்கு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, நெல்லையில் கூடுதலாக டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் : 9 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு!

இந்த நிலையில், தென்காசியில் சிறுமி உட்பட 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். தென்காசி அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 9ம் தேதி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு எதிரே 7 வயது சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி, அந்த சிறுமியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், சுரண்டை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.