தேனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. கம்பம் பகுதியில் 2 பேர் பலி!

 

தேனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. கம்பம் பகுதியில் 2 பேர் பலி!

கொரோனா அதிகமாகப் பரவி வரும் மாவட்டங்களில் ஒன்று தேனி மாவட்டம். அங்கு நேற்று ஒரே நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 97 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கம்பத்தில் மட்டுமே 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தேனி கொரோனா பாதிப்பு 1,093 ஆக உயர்ந்துள்ளது.

தேனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. கம்பம் பகுதியில் 2 பேர் பலி!

இதுவரை அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது 634 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கம்பம் மெட்டு சாலையைச் சேர்ந்த 57 வயதான நபரும், சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த 46 வயதான பெண்ணும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.