ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்.. அடுத்தடுத்து நிகழும் மரணம்!

 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்.. அடுத்தடுத்து நிகழும் மரணம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் முறை கோரதாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தி இயல்பு இலையை மீட்டெடுக்க சுகாதாரத்துறை போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்.. அடுத்தடுத்து நிகழும் மரணம்!

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னதாக டெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் நேர்ந்தது. மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய மத்திய அரசு, இந்திய ரயில்வே மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரிப்பது மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது.