• February
    24
    Monday

Main Area

Main



குளித்துக் கொண்டே பைக்கில் பயணம் – வியட்நாமில் 2 இளைஞர்கள் நிகழ்த்திய விநோத செயல்

bath at bike
bath at bike

ஹனாய்: வியட்நாமில் குளித்துக் கொண்டே இரண்டு இளைஞர்கள் பைக்கில் பயணம் செய்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

வியட்நாமில் குளித்துக் கொண்டே இரண்டு இளைஞர்கள் பைக்கில் பயணம் செய்த விநோத சம்பவம் நடந்துள்ளது. பின் டுவாங் மாகாணத்தில் மேலாடை அணியாமல் வெறும் பேண்ட் மட்டும் போட்டிருந்த இரண்டு இளைஞர்கள் பைக்கின் நடுவில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக் கொண்டு, உடம்புக்கு சோப்பு தேய்த்துக் கொண்டு பைக்கில் பயணம் செய்தனர். மேலும் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், வாளியில் இருந்து தண்ணீரை தன் மீதும் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த தன்னுடைய நண்பன் மீதும் ஊற்றிக் கொண்டும் சென்றார்.

அந்த இளைஞர்களின் செயலை அங்கிருந்தவர்கள் நகைப்போடு பார்த்தனர். மேலும் பலரும் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். உடனடியாக அந்த வீடியோக்கள் வைரலாக பரவின. இளைஞர்களின் விநோத குளியல் வீடியோவை பார்த்த போலீசார் பைக் நம்பர் பிளேட்டை வைத்து அந்த இருவரையும் பிடித்தனர். போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 80 டாலர் (சுமார் ரூ.5,600) அபராதம் விதித்தனர். மேலும் ஓட்டுனர் உரிமம் பெற்றிராத இளைஞனுக்கும், பைக்கை வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.