’கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தருக’ தமிழ்நாடு முஸ்லீம் லீக்

 

’கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தருக’ தமிழ்நாடு முஸ்லீம் லீக்

கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதைப் போலவே தினமும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிமாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களில் பல நிர்கதியாக நிற்கின்றன. இப்போது உள்ள நிலவரப்படி கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் ரூபாய் அளித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அதிகரித்து வழங்க கோரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு முஸ்லீம் லீக்.

’கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தருக’ தமிழ்நாடு முஸ்லீம் லீக்

’கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது 2 லட்சத்தி 6 ஆயிரத்து 737 பேருக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2 தினங்களாக நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதால் தமிழக மக்களிடையை அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், அதில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 055 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3,409 மரணம் அடைந்துள்ளனர்.

’கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் தருக’ தமிழ்நாடு முஸ்லீம் லீக்
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ள இத்தருணத்தில் பாராட்டுகுரியது. அதே போன்று தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கூடியவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணநிதியாக ரூ.2 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்கவேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியுள்ளது.