’கரண்ட் பில் இத்தனை லட்சம் ரூபாயா?’ பாடகி ஆஷா போஸ்லே அதிர வைத்து மின்வாரியம்

இரண்டு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்ற மகத்தான இசைக்கலைஞர் ஆஷா போஸ்லே. அரைநூற்றாண்டும் அதிகமான காலம் சிறப்பான பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்து வருபவர்.

தமிழில் ராமராஜன் நடித்து, இளையராஜா இசையமைத்த ’எங்க ஊர் பாட்டுக்காரன்’ படத்தில் ஆஷா போஸ்லே பாடிய ‘செண்பகமே… செண்பகமே…’ என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது. தொடர்ந்து ஹேராம், அலைபாயுதே, இருவர் என குறிப்பிடத்தகுந்தளவில் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் குறைவாகப் பாடியிருந்தாலும் இந்தியில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார்.

இப்போதைய செய்தி, இவரின் பாடலைப் பற்றியது அல்ல. இவர் வீட்டுக்கு வந்த மின் கட்டணம் பற்றியது.

மகாராஷ்டிராவில் உள்ள லோனேவாலோவில் வசித்து வருகிறார் ஆஷா போஸ்லே. இவரது ஜீன் மாதக் கட்டணம் 2,08,870 (இரண்டு லட்சத்து எட்டாயிரத்து எண்ணூற்று எழுபது) இதைப் பார்த்தால் யாருக்குத்தான் அதிர்ச்சி வராது.

ஒருவேளை மாதந்தோறும் இப்படி லட்சக்கணக்கில்தான் அவருக்கு மின் கட்டணம் வரும் என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல். அவர் வீட்டின் ஏப்ரல் மாத மின்கட்டணம் 8,996 ரூபாய்தான்.  மே மாத மின்கட்டணம் 8,855 ரூபாய்தான். இப்போது வந்திருக்கும் கட்டணத்தோடு ஒப்பிட்டால் இரண்டு லட்சம் ரூபாய் அதிகமாக வந்துள்ளது.

அதிகளவில் மின்கட்டண வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆஷா போஸ்லே அப்பகுதி மின்வாரியத்திடம் புகார் அளித்திருக்கிறார். வீட்டுக்கு வந்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் சரியாகவே கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனராம்.

கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் மின் அளவீட்டில் பெரும் குழப்பம் நடந்ததாகக் கூறப்பட்டது. எதிர்க்கட்சியான திமுக இதற்காக போராட்டமே நடத்தியது. நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.

இப்போது ஆஷா போஸ்லேவுக்கு வந்திருக்கும் மின்கட்டணத் தொகையைப் பார்க்கும்போது இது இந்திய அளவிலான பிரச்னை போல் தெரிகிறது.

 

Most Popular

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...