க்ரீம் பிஸ்கெட்டுகள் சாப்பிட்ட குழந்தைகள் பரிதாப பலி; ஆலையில் அதிரடி சோதனை!

 

க்ரீம் பிஸ்கெட்டுகள் சாப்பிட்ட குழந்தைகள் பரிதாப பலி; ஆலையில் அதிரடி சோதனை!

ஆந்திர மாநிலத்தில் க்ரீம் பிஸ்கெட்டுகள் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்ததால், பிஸ்கெட் ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தெலங்கானா மாநிலத்தில் பிரபலமான பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கெட்டுகள் பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் இரண்டு பேர் இந்த நிறுவனம் தயாரித்த க்ரீம் பிஸ்கட்டுகளை சாப்பிட்டதால் உயிரிழந்தனர்.

க்ரீம் பிஸ்கெட்டுகள் சாப்பிட்ட குழந்தைகள் பரிதாப பலி; ஆலையில் அதிரடி சோதனை!

பிஸ்கட்டுகள் சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், இன்று பிஸ்கெட் ஆலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பிஸ்கெட் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கர்னூல் மாவட்டத்தில் உயிரிழந்த குழந்தைகள் சாப்பிட்ட பிஸ்கெட் மாதிரிகளையும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பேசிய அதிகாரிகள், பரிசோதனை முடிவு வந்தால் தான் உண்மை என்னவென்பது தெரிய வரும் என்றும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.