திருச்செந்தூர் கோவிலில் காணிக்கையாக வந்த கோடிக்கணக்கான பணம்; கிலோ கணக்கில் தங்கம்!

திருச்செந்தூர் கோவிலில் காணிக்கையாக வந்த கோடிக்கணக்கான பணம்;  கிலோ கணக்கில் தங்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலில் காணிக்கையாக வந்த கோடிக்கணக்கான பணம்;  கிலோ கணக்கில் தங்கம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோயில் குரு ஸ்தலமாக விளங்குவதால், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் பண்டிகை காலங்களில் இங்கு கூட்டம் களைக்கட்டும். உள்ளூர் மட்டுமில்லாது வெளியூர்களிலிருந்தும் வந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோவிலில் காணிக்கையாக வந்த கோடிக்கணக்கான பணம்;  கிலோ கணக்கில் தங்கம்!

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை மாதத்திற்கான காணிக்கையானது 2 கோடியே 28 லட்சத்து 47 ஆயிரத்து 635 ரூபாய் காணிக்கை வந்துள்ளது. அத்துடன் கோசாலை உண்டியலில் 1,54,758 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.30,105 காணிக்கை கிடைத்துள்ளது. ஆக மொத்தம் 2 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 44 ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. அதேபோல் 2 கிலோ தங்கம், 16 கிலோ வெள்ளி, 46 வெளிநாட்டு நோட்டுகள் என திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காணிக்கையாக வந்துள்ளது.