மேற்கு வங்காளத்தில் 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

 

மேற்கு வங்காளத்தில் 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் அலிபூர் மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்களில் இவ்விரு நீதிபதிகளும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் தற்போது 4025 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 7,303-ஆக உள்ளது. மேலும் 294 பேர் கொரோனாவால் மேற்கு வங்காளத்தில் இறந்துள்ளனர்.