+2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை: சு. வெங்கடேசன் எம்.பி

 

+2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை:  சு. வெங்கடேசன் எம்.பி

பிளஸ் 2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை என்று சு. வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

+2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை:  சு. வெங்கடேசன் எம்.பி

இந்தியாவில் கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என கல்வியாளர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதில் மாணவ – மாணவிகளிடையே இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில், “தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள #Covid19 சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.