darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



+2 முடிச்சிருந்தா மருத்துவத்துறையில் வேலை! 1508 காலியிடங்களுக்கு தேர்வு!

மருத்துவத்துறையில் வேலை!
மருத்துவத்துறையில் வேலை!

தமிழக மருத்துவர்த் துறையில் காலியாக உள்ள 1508 லேப் டெக்னீஷியன்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரவேற்பதாக அறிவித்துள்ளது. கிரேடு 3 நிலையில் உள்ள இந்த லேப் டெக்னீஷியன்கள் பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. 

hospital work

www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின்னர், அந்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி டிசம்பர் 09 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி 12ம் வகுப்பு தோர்ச்சியுடன், மருத்துவக் கல்லூரி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சி.எம்.எல்.டி ஓராண்டு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும் எனவும், நல்ல உடல் தகுதியும், பார்வைத் திறனும் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்களில் பிளஸ் 2 மற்றும் சி.எம்.எல்.டி பொது தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.