’தோனியின் ஜெர்சி எண் 7- மற்றவர்க்கு கொடுக்கக்கூடாது’ வலியுறுத்தும் 2 கிரிக்கெட் வீரர்கள்

’தோனியின் ஜெர்சி எண் 7- மற்றவர்க்கு கொடுக்கக்கூடாது’ வலியுறுத்தும் 2 கிரிக்கெட் வீரர்கள்

விக்கெட் கீப்பராக இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்தவர் தோனி. அதிரடி பேட்ஸ்மேனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் ஆடியபோது சச்சின் டெண்டுல்கர், சவுரங் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகிய மூன்று பெரும் நட்சத்திரங்களும் அணியில் இருந்தனர்.

அத்தனை பேரையும் கடந்து மஹேந்திர சிங் தோனி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தன் கேப்டன்ஷிப் சிறப்பானது என தோனி நிருபித்தார்.

’தோனியின் ஜெர்சி எண் 7- மற்றவர்க்கு கொடுக்கக்கூடாது’ வலியுறுத்தும் 2 கிரிக்கெட் வீரர்கள்

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்

டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான்.

கடந்த 15-ம் தேதி சரியாக முன்னிரவு 7.29 மணிக்கு தனது ஓய்வை அறிவித்தார் தோனி.

’தோனியின் ஜெர்சி எண் 7- மற்றவர்க்கு கொடுக்கக்கூடாது’ வலியுறுத்தும் 2 கிரிக்கெட் வீரர்கள்

தோனியின் ஜெர்சி நம்பர் 7. அந்த நம்பர் மைதானத்திற்குள் நுழையும்போதே ஒட்டுமொத்த அரங்களே அதிரும்படி சத்தமும் கைதட்டலும் விசிலும் வானத்தையே பிளக்கச் செய்யும்.

ஜெர்சி எண் 7 என்பது தோனியின் சிறப்புக்குரிய அடையாளமும்கூட. எனவே அந்த எண்ணை வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது என இரண்டு கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

’தோனியின் ஜெர்சி எண் 7- மற்றவர்க்கு கொடுக்கக்கூடாது’ வலியுறுத்தும் 2 கிரிக்கெட் வீரர்கள்

ஒருவர், நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். தோனியுடன் தான் எடுத்த கடைசி போட்டோவைப் பகிர்ந்துகொண்ட தினேஷ் கார்த்திக், வெள்ளைப் பந்து போட்டியில் ஜெர்சி எண் 7 ஓய்வு பெற வேண்டும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்திருக்கிறார்.

இதில் நகைமுரண் என்னவென்றால், தோனி கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதால் அதிக வாய்ப்புகளை இழந்தவர் தினேஷ் கார்த்திக்தான்.

’தோனியின் ஜெர்சி எண் 7- மற்றவர்க்கு கொடுக்கக்கூடாது’ வலியுறுத்தும் 2 கிரிக்கெட் வீரர்கள்

மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜூம் இதே கோரிக்கையை முன் வைக்கிறார். தோனியின் ஓய்வு குறித்த அவரது ட்விட்டில், ’இந்தியர்களின் கனவான இரண்டு உலககோப்பைகளை வென்று அளித்தவர் கூல் கேப்டன் தோனி’ என்று பாராட்டியவர் ஜெர்சி 7 க்கு அழியாத வரம் அளித்தவர் என்றும் கூறியிருக்கிறார்.

இவர்களின் ட்விட் ரசிகர்களிடம் தீயாய் பரவி, பலரும் அந்தக் கருத்தையே பிரதிபளிக்கிறார்கள்.

ரசிகர்களின் விருப்பதை பிசிசிஐ நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.