திருவொற்றியூரில் தடையை மீறி கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி!

 

திருவொற்றியூரில் தடையை மீறி கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி!

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் சிகிச்சைக்கு பின் குணமடைந்த வீடு திரும்பும் சதவீதம் அதிகரித்து வருகிறது.இருப்பினும் மக்களின் பொருளாதார பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்தும் பல்வேறு தளர்வுகளையும் அமல்படுத்தியுள்ளது.

திருவொற்றியூரில் தடையை மீறி கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி!

இருப்பினும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகள் மறு உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக திரையரங்குகள், நீச்சல் குளங்கள் ,பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள்,கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை தொடர்கிறது.

திருவொற்றியூரில் தடையை மீறி கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி!

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் அருகே திருச்சினாங்குப்பம் கடலில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற விஜய் ராகுல் ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடற்கரையில் குளிக்கவும், செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி சென்ற சிறுவர்கள் பலியாகியுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.