பப்ஜி மோகத்தில் 19 செல்போன்களை திருடிய 2 சிறுவர்கள்!

 

பப்ஜி மோகத்தில் 19 செல்போன்களை திருடிய 2 சிறுவர்கள்!

2 சிறுவர்கள் பப்ஜி விளையாடுவதற்காக 19 செல்போன்களை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பப்ஜி’ என அழைக்கப்படும் விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் தற்கொலை, எதிர்ப்பாராத மரணமும் இதனால் ஏற்படுகிறது.

பப்ஜி மோகத்தில் 19 செல்போன்களை திருடிய 2 சிறுவர்கள்!

தெற்கு டெல்லியில் நெப் சராய் பகுதியில் உள்ள கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன்கள், லூடோ, செஸ் போன்ற விளையாட்டு போர்டுகள் காணாமல் போனது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் இருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்தது கண்டுபிபிடிக்கப்பட்டது.

பப்ஜி மோகத்தில் 19 செல்போன்களை திருடிய 2 சிறுவர்கள்!

விசாரணையில் நண்பர்களுடன் இணைந்து பப்ஜி விளையாட 19 செல்போன்களை திருடியதாக தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.