kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பொருளாதாரம் சரியில்லேங்கிறாங்க, ஆனா இவனுங்ககிட்ட எப்புடி இவ்ளோ பணம்?

1.5 Cr worth Riyal smuggled
1.5 Cr worth Riyal smuggled
Loading...

ஆட்டோமொபைல் துறை படுத்துவிட்டது, ரியல் எஸ்டேட் துறையில் எழுந்திருக்க முடியவில்லை, நுகர்வோர் துறை இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்ற நிலை என பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி பாய்வதாக ஒருபக்கம் பொருளாதார வல்லுநர்களும், ’நிஜமான’ தேசபக்தர்களும் வாயிலும் வயிற்றிலும் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாராமா, சரிவா? நோ நோ, சமோசா விற்றே கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள் தெரியுமா, பக்கோடா பொட்டலம் போட்டே லட்சாதிபதிகள் ஆகிவிட்டார்கள் தெரியுமா என ஆளும்தரப்பு ஒருபக்கம் பொங்குவரும் வெள்ளத்தை தெர்மாகோல் கொண்டு அடைக்கப் பார்க்கிறது. இந்த இரண்டு பக்கமும் சேராமல், இன்னொரு பக்கம் இந்த கடத்தல் கும்பல் மட்டும் தங்குதடையின்றி தங்கள் தொழிலை நடத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

Foreign currency hidden in biscuit pocket

ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை இருவர் எடுத்துச்செல்வதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது. கடத்தல் புள்ளீங்கோ ரெண்டு பேரும் பயங்கரம். ஒன்றாக சென்றால் ஒன்றாக மாட்டிக்கொள்வோம் என்று ஆளுக்கு வேறுவேறு விமானத்தில் ஆறு மணி நேர வித்தியாசத்தில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்திருக்கிறார்கள். முதல் புள்ளியை பிடித்த அதிகாரிகள் அவரது உடைமைகளைச் சோதனை செய்ததில், பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு அடியில் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுதி ரியால் நோட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னாடியே வந்த இன்னொரு புள்ளியிடமிருந்தும் ரியால்கள் கைப்பற்றப்பட்டு எண்ணிப் பார்த்தால், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கான சவுதி ரியால்களை இருவரும் சேர்ந்து கடத்தியிருக்கிறார்கள். இந்த கும்பலுக்கு மட்டும் எங்கேயிருந்துதான் காசு வருதுன்னே தெரியமாட்டேங்குது?
 

2018 TopTamilNews. All rights reserved.