மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

 

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 2.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. முதலில் வடமாநிலங்களில் தான் பாதிப்பு அதிகளவு இருந்தது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து நிலைமை மிக மோசமாக இருந்தது. அந்த நிலைமை தற்போது தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும் வந்து விட்டது. பாதிப்பு அதிகமாக இருக்கும் தமிழகம் உள்ளிட்ட 9 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி பல அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். அதன் படி, அந்தந்த மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,874 பேர் உயிரிழந்ததாகவும் 3,69,077 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,29,878 ஆக குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… இந்தியாவை உலுக்கி எடுக்கும் இரண்டாம் அலை!

மேலும், மொத்த பாதிப்பு 2,57,72,400 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,122, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,23,55,440 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இரண்டரை லட்சத்துக்கும் கீழ் பதிவான நிலையில், இன்று பாதிப்பு 2.76 லட்சமாக அதிகரித்துள்ளது. எனினும், குணமடைவோர் எண்ணிக்கை 3.69 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.