அசுர வேகத்தில் பரவும் கொரோனா… திணறும் சுகாதாரத்துறை!

 

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… திணறும் சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் பன்மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை, மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தியிருப்பினும் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகமாக பரவு வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… திணறும் சுகாதாரத்துறை!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா 1,501 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் 1,38,423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும் 18,01,316 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… திணறும் சுகாதாரத்துறை!

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 2.17 லட்சம், நேற்று 2.34 லட்சமாக இருந்த நிலையில், இன்று 2.61 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல உயிரிழப்புகளில் 1,500ஐ எட்டியுள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் வெளியிலேயே காத்துக் கிடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இந்தியாவை உலுக்கி எடுக்கும் இந்த கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.