இந்தியாவில் 2.56 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

 

இந்தியாவில் 2.56 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

இந்தியாவில் இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி 2 கோடியே 56 லட்சத்து 90,545 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், “தடுப்பூசி விலையை மேலும் குறைத்து வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி 2 கோடியே 56 லட்சத்து 90,545 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொற்று மீண்டும் அதிகரிப்பதால் மகாராஷ்ட்டிரா மாநில நாக்பூரில் வரும் 15 தேதி முதல் 21 ஆம் தேதிவரை கொரோனா ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் 2.56 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

தமிழ்நாட்டில் கடந்த 16 நாட்களில் கொரோனா பாதிப்பு சதவீதம் வேகமாக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை கூறுகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் அதிகமாக நடந்த குடும்ப நிகழ்வுகள், கோவில், திருவிழாக்கள் போன்றவைதான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அரசியல் வாதிகள் பிரச்சாரத்தால் பொது வெளியில் கூடிய கூட்டங்களாலும் பாதிப்பு என்பதை மாநில சுகாதாரத்துறை மறந்துவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ஆறு மாதம் சிறை என்று அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். இப்படியே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே இருந்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது” எனக் கூறினார்.