வீட்டில் பதுக்கி வைத்த 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

வீட்டில் பதுக்கி வைத்த 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ஈரோடு

ஈரோடு அருகே குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் வளையக்கார வீதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

வீட்டில் பதுக்கி வைத்த 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!


அப்போது, குப்பிபாலம் பகுதியில் வசித்து வரும் ஜெயந்தி என்பவரின் வீட்டில் சுமார் 50 மூட்டைகளில் 25 ஆயிரம் மதிப்புள்ள இரண்டரை டன் ரேஷன் அரிசி
பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதனை பதுக்கிவைத்திருந்த வீட்டின் உரிமையாளர் ஜெயந்தி என்பவரை கைதுசெய்தனர். மேலும், கடத்தலில் தொடர்புடைய கருங்கல்பாளையத்தை சேர்ந்த முருகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இரண்டரை டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.