கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு ரூ.2.5 கோடி நிதியுதவி : நடிகர் சூர்யா அறிவிப்பு!

 

கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு ரூ.2.5 கோடி நிதியுதவி : நடிகர் சூர்யா அறிவிப்பு!

கொரோனா முன் களப்பணியாளர்கள் குடும்பத்தினருக்கு 2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக நடிகர் சூர்யா வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அதில் கிடைக்கும் லாபத்தில் 5 கோடியை பகிர்ந்து அளிக்கவுள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.

கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு ரூ.2.5 கோடி நிதியுதவி : நடிகர் சூர்யா அறிவிப்பு!

இந்நிலையில் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தில் உள்ள ஒரு மாணவர்/ மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதாக சூர்யா ரூ.2.5 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். ஒரு மாணவருக்கு ரூபாய் 10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் www.agaram.in இல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உறுப்பினர்கள் அல்லாத திரையுலகை சேர்ந்த விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளைக்கு 20 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு ரூ.2.5 கோடி நிதியுதவி : நடிகர் சூர்யா அறிவிப்பு!

நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளைக்கு 20 லட்சம் நிதி உதவி நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நன்றி நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2,000 பேருக்கு விரைவில் தொகை பிரித்து வழங்கப்படும் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2,000 பேருக்கு விரைவில் தொகை பிரித்து வழங்கப்படும் என்றும் அறக்கட்டளை கூறியுள்ளது.