ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.5 கோடி மோசடி- 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது

 

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.5 கோடி மோசடி- 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது

திருச்சி

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திருச்சி ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது மகள்கள் மற்றும் மருமகன்களுடன் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வருகின்றார். இவர்களிடம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேறபட்டோர் கோடி கணக்கில் பணம் செலுத்தியுள்ள நிலையில், உறுதி அளித்தபடி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி தர வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈ.பி.ரோடு பகுதியை சேர்ந்த பழ வியாபாரி ஜெயச்சந்திரன் என்பவர், தன்னிடம் 5 லட்ச ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக பழனிசாமி மீது திருச்சி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், பழனிசாமி உள்ளிட்ட 10 பேர் மீது, திருச்சி குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.5 கோடி மோசடி- 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது

விசாரணையில், பழனிசாமி குடும்பத்தினர் 200-க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று, திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று, பழனிசாமியின் மகள் மஞ்சுளா(40), அவரது கணவர் சித்திரவேல்(45). பழனிசாமியின் மற்றொரு மகள் விஜயலட்சுமி, அவரது கணவர் சரவணன்(40), மற்றும் உறவினர் சுமதி ராணி(30) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

பின்னர், கைதானவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், ஏலச்சீட்டு மோசடி விவகாரம் குறித்து ஏராளமானோர் புகார் அளித்து வருவதால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.