கருப்பு பூஞ்சை பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்

 

கருப்பு பூஞ்சை பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்

கருப்பு பூஞ்சை நோயின் பயங்கரத்தினால் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என மூன்று பேரின் கண்கள் அகற்றப்பட்டுள்ளன. 4,6,14 ஆகிய வயதுடைய மூன்று பேருக்கும் கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக மும்பை ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்

கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும், இரண்டு சிறுமிகளுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அந்த கருப்பு பூஞ்சை மூளைக்கு சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முன்பாக மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு, மூன்று பேருக்கும் கண்களை அகற்றினர். தக்க நேரத்தில் கண்களை அகற்றியதால் மூன்று பேரின் உயிரையும் காப்பாற்ற முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்

கொரோனா தொற்று பாதித்தவர்கள் அத்தொற்றில் இருந்து மீண்டாலும் கருப்பு பூஞ்சை தொற்று அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சல் பூஞ்சை என்று எல்லாம் வந்து இப்போது இந்தியாவில் ‘ஆஸ்பர்கில்லோசிஸ்’எனும் பச்சை பூஞ்சையும் வந்து அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக ஒரு இளைஞர் இந்த பச்சை பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த 34 வயது அந்த இளைஞர், விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.