கொரோனாவை வரவேற்கும் நபர்கள்… 2 நாளில் வசூலான அபராதம்!!

 

கொரோனாவை வரவேற்கும் நபர்கள்… 2 நாளில் வசூலான அபராதம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக இருந்ததைக் காட்டிலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொற்று எண்ணிக்கை 500க்கும் கீழே இருந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கொரோனா இரண்டாவது அலை முன்பை விட அதிவேகத்தில் பரவுவதால் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் பல இடங்களில் முகக்கவசங்கள் அணியாமல் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.

கொரோனாவை வரவேற்கும் நபர்கள்… 2 நாளில் வசூலான அபராதம்!!

இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டிருப்பதால் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். இதனால் முகக்கவசம் அணியாமல் செல்வோர் , சாலைகளில் எச்சில் துப்புவோருக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாயும், எச்சில் துப்பினால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்து அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது.

கொரோனாவை வரவேற்கும் நபர்கள்… 2 நாளில் வசூலான அபராதம்!!

இந்த சூழலில் சென்னையில் ஏப்ரல் 8 முதல் 10-ஆம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்ற 1,118 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களிடமிருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தனிமனித இடைவெளியை பின்பற்றாத 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயை வசூலித்தனர். இதேபோல் கரூர் ,கோவை, கடலூர், மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 29 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.