Home அரசியல் எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது... 2.11.2007ல் வேதனையை வெளிப்படுத்திய பிரபாகரன்

எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது… 2.11.2007ல் வேதனையை வெளிப்படுத்திய பிரபாகரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் 13ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் உணர்வாளர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உணர்வை இழந்து,உரிமையையும் இழந்து, அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக, மக்கள் படை கட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் தளபதி! மாவீரன்!நமது அண்ணன் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவு நாளில் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கத்தைச் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இலங்கை இறுதிப்போரின்போது 2.11.2007ல் கிளிநொச்சியில் காலை 6 மணிக்கு இலங்கை வான்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டவர் சு.ப.தமிழ்ச்செல்வன். அதுகுறித்தும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும், சு.ப.தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் 3.11.2007ல் விடுத்த இரங்கல் அறிக்கையில், ‘’சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது’’என்று வேதனையை வெளிப்படுத்திய பிரபாகரன்,

’’தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது’’என்று சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத நிலையைச் சொன்ன பிரபாகரன்,

’’தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சு வார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன். நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான்’’என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்”

மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும் எந்திரபிஉ முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் 2-வது...

கொழுப்பு சத்து மிக்க உணவுகள் சாப்பிட்டால் தப்பில்லை!

அரிசி உணவு எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும், அதிக கொழுப்பு சத்து உள்ள உணவு உட்கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று சில நம்பிக்கைகள் அனைவர் மத்தியிலும் உள்ளது. இப்படி...

“சசிகலா எழுந்து நடக்கிறார் ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்”

சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில்...

மணலியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை மணலி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!