2.0 படத்திற்கு வாழ்த்து கூறிய பேட்ட: எப்படி தெரியுமா?

 

2.0 படத்திற்கு வாழ்த்து கூறிய பேட்ட: எப்படி தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்திற்கு ‘பேட்ட’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்திற்கு ‘பேட்ட’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் பேட்ட படக்குழு 2.0 திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், பேட்ட ரஜினி, 2.0 சிட்டி என இரு கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு 2.0 திரைப்படம் வெற்றிப்படமாக அமைய தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸின் இந்த வாழ்த்துக்கு 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொக்ஷன் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.