2.0  டிரைலர் ரிலீஸ் எப்போ?

 

2.0  டிரைலர் ரிலீஸ் எப்போ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவ.29ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்தது. ஆனாலும், இப்படத்தின் தமிழ் டீசரை விட ஹிந்தி டீசர் அதிக லைக்ஸ்களை குவித்தது. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடத்தில் செம லைக்ஸ் குவித்தது.

இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரைலரை இன்னும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வரும் நவ.2ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் 4டி டால்பி சவுண்ட் சிஸ்டத்தி வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.