Home சினிமா 2.0-வில் மாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்த் : பாராட்டிய பிரபல இயக்குநர்!

2.0-வில் மாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்த் : பாராட்டிய பிரபல இயக்குநர்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள  2.0 திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டி உள்ளார்.

2.0-வில் மாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்த் : பாராட்டிய பிரபல இயக்குநர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள  2.0 திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டி உள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 4 ஆண்டுகளாக கடும்    
உழைப்பிற்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம்  2.0. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோபோ சிட்டிக்கு ஜோடியாக இப்படத்தில் ஏமி ஜாக்சன்  நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

murugadoss

இப்படம் குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில்,  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு உள்ளார். அதில், ‘2.0 திரைப்படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்தையும், அக்‌ஷய் குமாரின் சிறப்பான நடிப்பையும் வெகுவாக ரசித்தேன். லைகா மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.  

அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2.0-வில் மாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்த் : பாராட்டிய பிரபல இயக்குநர்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சுரங்கம் அமைத்து ரகசியமாக பாலியல் தொழில் – சுரங்க அறைக்குள் இருந்த பெண்கள் மீட்பு

சொகுசு விடுதிகளில் நடைபெறும் பாலியல் தொழிலுக்கு போலீசாரின் கெடுபிடி இருப்பதால் ஓடும் பேருந்தை சொகுசு விடுதி ஆக்கி பாலியல் தொழில் நடந்து வருவது அம்பலமானது. படுக்கை வசதி கொண்ட சொகுசு...

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை முதன்மை நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நடிகை...

அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை நாக்பூரில் மீட்பு

சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை புகார் அளித்த நான்கு மணி நேரத்திற்குள் நாக்பூரில் மீட்டிருக்கிறார்கள் போலீசார். பீகார் மாநிலத்தின்...

தேர்வெழுதும் பார்வையற்றவர்களுக்கு உதவியாளரை நியமிக்கலாம் – தமிழக அரசு அனுமதி!

ஆசிரியர் தேர்வு வாரியம், 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பார்வையற்றவர்களுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்கக் கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம்...
TopTamilNews