Home சினிமா ‘2.0’ மிக்சிங்கில் திளைத்த ஏ.ஆர்.ரகுமான்!

‘2.0’ மிக்சிங்கில் திளைத்த ஏ.ஆர்.ரகுமான்!

‘2.0’ திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான ட்வீட்டை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

‘2.0’ மிக்சிங்கில் திளைத்த ஏ.ஆர்.ரகுமான்!

சென்னை: ‘2.0’ திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான ட்வீட்டை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமான ‘2.0’ படத்தில் வெறும் 4 பாடல்களே இடம்பெற்றுள்ள நிலையில், பின்னணி ஸ்கோரில் கூடுதல் உழைப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘2.0’ படத்தின் மிக்சிங் குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்,‘6வது ரீல் மிக்சிங்.. 2.0 ஓ மை காட்..! உணர்ச்சி மற்றும் அறிவியல் கலந்த காவியம்’ என பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் ஒரு படத்தை இந்த அளவிற்கு புகழந்தது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

‘2.0’ மிக்சிங்கில் திளைத்த ஏ.ஆர்.ரகுமான்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்!

மத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...

“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்!

உயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...

பெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...
- Advertisment -
TopTamilNews