Home சினிமா 2.0  டிரைலர் ரிலீஸ் எப்போ?

2.0  டிரைலர் ரிலீஸ் எப்போ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவ.29ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்தது. ஆனாலும், இப்படத்தின் தமிழ் டீசரை விட ஹிந்தி டீசர் அதிக லைக்ஸ்களை குவித்தது. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடத்தில் செம லைக்ஸ் குவித்தது.

இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரைலரை இன்னும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வரும் நவ.2ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் 4டி டால்பி சவுண்ட் சிஸ்டத்தி வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மாவட்ட செய்திகள்

Most Popular

சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்தி, சாலையோரம் நின்று நுங்கு சாப்பிட்ட சம்பவம் காங்கிரசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்...

“பார்ட் பார்ட்டா படம் புடிச்சி பணம் கறக்குறானே ” -ஹோட்டல் மேனேஜரிடம் 33லட்சம் ஏமாந்த பெண்

37 வயதான பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் ,உல்லாச வீடியோவை காமித்து மிரட்டியும் 33 லட்சம் ஆட்டைய போட்ட ஒரு ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்தனர்

எம்ஜிஆர் சிலையை தீப்பற்ற வைத்த திமுகவினர்… திருப்பத்தூரில் அதிர்ச்சி!

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது புகார்!

தலைவாசல் சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அடித்து நொறுக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் நேற்று மாநாடு...
TopTamilNews