2 வாரங்களில் இத்தனை கோடியா? வசூலில் பிரம்மாண்டம் காட்டும் ‘2.0’!

 

2 வாரங்களில் இத்தனை கோடியா? வசூலில் பிரம்மாண்டம் காட்டும் ‘2.0’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் இமாலய சாதனை படைத்துள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் இமாலய சாதனை படைத்துள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் கடந்த நவ.29ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ’2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

2point0

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ’2.0’ திரைப்படம் வெளியான 2 வாரங்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.710.18 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ‘2.0’ வெளியாகி 15 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. இதன் ஹிந்தி வெர்ஷனின் வசூல் மட்டுமே டபுள் சென்சுரியை எட்டியுள்ளது. 15 நாட்களில் ‘2.0’ படத்தின் ஹிந்தி வெர்ஷன் மட்டும் ரூ.177.75 கோடி வசூலித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் மட்டும் ரூ.166.98 கோடி வசூலித்துள்ள நிலையில், 2 வாரங்களில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் ரூ.20 கோடி வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் ‘2.0’ என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர இப்படம் சுமார் 56,000 திரைகளில் சீனாவில் வரும் மே மாதம் இப்படம் ரிலீசாகவுள்ளது. இதன் மூலம் ‘2.0’ படத்தின் வசூல் ஹாலிவுட் படங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.