2 வருஷத்துல பொதுமக்களிடம் வித்துருங்க! நிறுவனங்களுக்கு டெட்லைன்!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் குறைந்தபட்ச மூலதனத்தை 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த அந்நிறுவனங்களுக்கு 2 ஆண்டு காலஅவகாசத்தை செபி வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் குறைந்தபட்ச பங்கு மூலதனத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு பரிந்துரை செய்தார். இதற்காக செபியும் விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செபி

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் நிறுவனத்தில் பொதுமக்களின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமானால் 10 சதவீத பங்குகளை அவர்களுக்கு கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு பங்குகள் விற்பனைக்கு வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த பிறகே நிறுவனங்கள் பங்கு விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செபி முதலில் பொதுமக்களின் பங்கு மூலதனத்தை நிறுவனத்தில் உயர்த்துவது தொடர்பாக இத்துறையை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்த பிறகு செயல் திட்டத்தை உருவாக்கும். அதன் பிறகே பொதுமக்களின் பங்கு மூலதனத்தை உயர்த்துவது தொடர்பாக தனது உத்தரவை பிறப்பிக்கும். ஆக, தற்போதைக்கு நிறுவனங்கள் பத்து சதவீத பங்குகளை உடனடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

பங்கு விற்பனை

மேலும், பொதுமக்களின் பங்கு மூலதனத்தை 35 சதவீதமாக உயர்த்த நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு காலம் அவகாசத்தை செபி கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் குறைந்தபட்ச பங்கு மூலதனத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு பரிந்துரை செய்தார். இதற்கான செபியும் விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.