2-வது டெஸ்ட் போட்டி: பிரித்வி ஷா அரைசதம்

 

2-வது டெஸ்ட் போட்டி: பிரித்வி ஷா அரைசதம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா அரை சதம் அடித்துள்ளார்.

ஹைதராபாத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா அரை சதம் அடித்துள்ளார்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களை நேற்று சேர்த்திருந்தது. தொடர்ந்து, இன்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, விளையாடிய இந்திய அணியின் ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.  இந்திய அணி உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரித்வி ஷா இரண்டாவது போட்டியில் அரைசதம் கடந்து அதிரடியாக ஆடி வந்தார். இந்த போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 70 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 10 ரன்களில் வெளியேறினார். கேப்டன் விராட் கோலி 45 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.  ரஹானே, ரிஷப் பண்ட் களத்தில் உள்ளனர்.