2 லட்சம் காரட் வைரம் வாங்கிய ஜெயலலிதா?! – சமூக வலைதளங்களில் விமர்சனம்

 

2 லட்சம் காரட் வைரம் வாங்கிய ஜெயலலிதா?! – சமூக வலைதளங்களில் விமர்சனம்

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா +11 தர வைரங்களில் 2 லட்சம் காரட் வாங்கியதாக தகவல் என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி வைரலாகி வருகிறது.

சூரத்: பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா +11 தர வைரங்களில் 2 லட்சம் காரட் வாங்கியதாக தகவல் என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி வைரலாகி வருகிறது.

பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், ஜெயலலிதா 2 லட்சம் காரட் வைரங்களை மும்பை வைர மார்க்கெட்டில் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா  மறைவுக்கு பின் அவரது நெருங்கிய உறவுகள் 1 லட்சம் காரட் வைரங்களை மும்பை மார்க்கெட்டில் விற்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இருந்து வைரங்கள் வந்து குவிவதால், +11 தர வைரங்களின் விலை 30% குறைந்துள்ளதாம். இந்நிலையில் இதனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.