2 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…

 

 2 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21 தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை 28 ஆம் தேதி நடைபெறும்

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தார் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களின் ஆட்சிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது 2 மாநிலங்களுக்கு மட்டும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை இடங்களும், ஹரியானாவில் 90 இடங்களும் உள்ளது.இந்தியத் தேர்தல் ஆணையம்

இன்றைக்கு செய்தியாளர்களை சந்தித்த  இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா “மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21 தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை 28 ஆம் தேதி நடைபெறும்” என்று அறிவித்தார். 

இரண்டாவது முறையாக மோடி ஆட்சியமைத்த பின் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது. 

இந்நிலையில் அவர் தமிழகத்தில் நடைபெறும் இடைதேர்தலுக்கான தேதிகளை அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.