2 நாளில் ரூ.300 கோடியை கல்லா கட்டிய டாஸ்மாக் வருமானம்! 

 

2 நாளில் ரூ.300 கோடியை கல்லா கட்டிய டாஸ்மாக் வருமானம்! 

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் இந்திய பொது முடக்கநிலையை அமல்படுத்தி வருகிறது. அதன்விளைவாக, தமிழகத்தில் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் இந்திய பொது முடக்கநிலையை அமல்படுத்தி வருகிறது. அதன்விளைவாக, தமிழகத்தில் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பொருளாதார பிரச்னை மர்றும் வருவாய் பாதிக்கப்படுவதால், இந்தியாவில் பச்சை மண்டலங்களில் மட்டும் மதுக்கடைகள் மே – 4ம் தேதியில் இருந்து இயங்க இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மதுக்கடையை திறந்ததால் தமிழக அரசும், கடந்த மே.7 ஆம் தேதி டாஸ்மாக்குகளை திறந்தது. இதனால் இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்றும் மது வாங்கிச் சென்றனர்.

tasmac sale

மதுப் பிரியர்களின் தேவைக்காக வழக்கத்தைவிட அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் 45 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மது வகைகள் அனைத்து விற்றுத் தீர்ந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதற்கிடையில் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இருப்பினும் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

டாஸ்மாக்

இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல்நாலில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையானதாக தமிழக அரசு தெரிவித்தது. இரண்டாவது நாளான நேற்று ரூ.125 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு கடந்த 2 நாட்களில் சுமார் 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மண்டலத்தில் 63.17 கோடியும், காஞ்சிபுரம் திருவள்ளுவர் மாவட்டங்களில் 43.28 கோடியும், கோவை மண்டலத்தில் 54.01 கோடியும், சேலம் மண்டலத்தில் 62.09 கோடியும், மதுரை மண்டலத்தில் 69.45 கோடியும் மது விற்பனை ஆகியுள்ளது.