2 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.57 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்…..2 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.57 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்…..

 

2 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.57 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்…..2 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.57 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்…..

கடந்த 2 தினங்களில் மட்டும் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் ரூ.3.57 லட்சம் கோடி லாபம் பார்த்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக அன்று ஒரு நாளில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் வீழ்ந்தது. இதனால் அடுத்து வரும் நாட்களில் பங்கு வர்த்தகம் எப்படி இருக்குமோ என்ற பீதியில் முதலீட்டாளர்கள் இருந்தனர். ஆனால், பங்கு வர்த்தகம் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

மத்திய பட்ஜெட்

கடந்த ஜனவரி மாதத்தில் வாகன விற்பனை ஒரளவுக்கு நன்றாக இருந்தது, மேனுபாக்சரிங் நடவடிக்கை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இது போன்ற சாதகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 2 தினங்களில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.61 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த சனிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.04 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 2 தினங்களில் ( திங்கள், செவ்வாய்) மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.57 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.