2 நாட்கள் தங்கி எஸ்.ஐ. வில்சனை திட்டமிட்டு கொன்றுள்ளனர்…கேரள போலீசார் திட்டவட்டம்!

 

2 நாட்கள் தங்கி எஸ்.ஐ. வில்சனை  திட்டமிட்டு கொன்றுள்ளனர்…கேரள போலீசார் திட்டவட்டம்!

ரகசிய கேமராவை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் இருவரும் நெய்யாற்றின் கரை வழியாக கேரளாவுக்கு நடந்துசென்றது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லையின் களியக்காவிளை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில்   சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன். இவர்  கடந்த 8 ஆம் தேதி வழக்கம் போல பணியிலிருந்த நிலையில், இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு  இளைஞர்கள்  அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில் துப்பாக்கி குண்டுகள் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருப்பதோடு, கத்தியால் குத்தியிருப்பதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

 

இதை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  தவுபீக், ஷமீம் என்ற இளைஞர்கள் இருவர்  வில்சனை சுட்டுவிட்டு  பள்ளிவாசல் வழியாக தப்பிச்சென்றது தெரிந்தது.இதனிடையே தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதி சாலைகளில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராவை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் இருவரும் நெய்யாற்றின் கரை வழியாக கேரளாவுக்கு நடந்துசென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் கையில் கருப்பு பை  இருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. 

 

இந்நிலையில் எஸ்ஐ வில்சன் கொலை திட்டமிட்டுச் செய்யப்பட்டது எனவும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கொலை திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  குற்றவாளிகள் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை பகுதியிலிருந்து கொலை நடந்த ஒரு மணி நேரத்திற்கு  சென்றுள்ளனர் . அங்கிருந்து ஆட்டோவில் வந்து கொலை செய்து விட்டு தப்பி சென்று உள்ளனர்.   இரண்டு நாட்களாக நெய்யாற்றங்கரை பகுதியில் தங்கிய அவர்கள். அங்குள்ள மசூதிக்கு வந்து சென்றுள்ளனர். அவர்கள் வரும் போது  கையில் வைத்திருந்த கருப்புப்பை  மாயமாகியுள்ளது. அன்று முழு  கடையடைப்பு என்பதால் அவர்கள் 400 ரூபாய் கொடுத்துஆட்டோவை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.