2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

 

2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை: கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக மழை விட்டு, விட்டுப் பெய்து வருகிறது. இது தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் மக்களுக்குச் சற்றே ஆறுதலாகவே உள்ளது. இதற்கிடையில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 12 முதல் 20 செண்டி மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.