2 நாட்களாக வலையில் சிக்கியிருந்த பாம்பை பிடித்து சாகசம் செய்த இளைஞர்.. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?!

 

2 நாட்களாக வலையில் சிக்கியிருந்த பாம்பை பிடித்து சாகசம் செய்த இளைஞர்.. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?!

பாம்பை மீட்டதோடு தினேஷ் அந்த பாம்பை வைத்து சாகசம் காட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் வீட்டின் பின்பக்கம் பாம்பு அடிக்கடி வருவதால் அங்கு வலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பாம்பு சிக்கிய நிலையில், இரண்டு நாட்களாக வெளியே வர முடியாமல் அங்கேயே இருந்துள்ளது. இதனையடுத்து,  புளிச்சக்காடு பகுதியில் வசித்து வரும் பாம்பு பிடிக்கும் நபருக்கு இதனை பற்றி அரவிந்த் தகவல் தெரிவிக்க, அங்கு சென்ற தினேஷ் பாம்பை மீட்டுள்ளார். பாம்பை மீட்டதோடு தினேஷ் அந்த பாம்பை வைத்து சாகசம் காட்டியுள்ளார். அதனை சிலர் ரசித்து பார்த்த நிலையிலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ttn

கடந்த வாரம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற போது அதே பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதே போல தினேஷுக்கும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய மக்கள், இது போன்று மக்களை பாம்பு பிடிக்க விடாமல் வனத்துறையினர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.