‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது: பிரதமர் மோடி

 

‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது: பிரதமர் மோடி

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க,  ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கியிருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. நாம் சுய சார்புடையவர்களாக மாற வேண்டும் என்று கற்பித்திருக்கிறது.

நரேந்திர மோடி

கொரோனா வைரஸ் பரவல் நாம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றிவிட்டது. நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை கொரோனா பரவல் சுட்டிக்காட்டி உள்ளது. தனி நபர் இடைவெளி மூலம் இந்தியா கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் தீவிரமாக இறங்க வேண்டும். கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும். பஞ்சாயத்துகளை ஆன்லைன் மூலம் இணைப்பதற்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது” என கூறினார். 

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு  ஸ்வாமித்வா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் ட்ரோன் (drone) பயன்படுத்தி நவீன தொழில்நுட்பத்தில் நில அளவையை மேற்கொள்ள இயலும். மேலும் இ – கிராம சுயராஜ் இணையதளம் மற்றும் மொபைல் செயலியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்