Home இந்தியா 2 வயது குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை: அதிர வைக்கும் வாக்குமூலம்!

2 வயது குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை: அதிர வைக்கும் வாக்குமூலம்!

அவரது மனைவி குழந்தை குறித்து விசாரிக்க,  போர்லா ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார்.  

2 வயது குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை: அதிர வைக்கும் வாக்குமூலம்!

அசாம்: 2 வயது குழந்தையை ஆற்றில் தள்ளி  தந்தையே கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருக்கு ஜூனு என்ற மனைவியும் , ரிஷகா என்ற 2 வயது மகளும் உள்ளனர். கடந்த  கடந்த 28ஆம் தேதி பீர்பால் மகளை அழைத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாமல் தனியாக வந்துள்ளார். இதை கண்ட அவரது மனைவி குழந்தை குறித்து விசாரிக்க,  போர்லா ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார்.  

river

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உறவினர்களின் உதவியுடன் ஆற்றில் தேடியுள்ளார்.ஆனாலும் குழந்தை கிடைக்காததால் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மாற்று போலீசார் உதவியுடன் குழந்தை ரிஷிகா சடலமாக மீட்கப்பட்டார். 

இதையடுத்து பீர்பாலை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய  விசாரணையில், கடவுள் என் கனவில் வந்து இப்படி செய்யச் சொன்னார். அதனால் மகளை ஆற்றில் வீசினேன் என்றுகூறியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவரின் மனைவி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் . அதனால் பில்லி சூனியத்தை நம்பி மந்திரவாதி ஒருவருடன் பழக்கம் வைத்திருந்தார். அவரின் தூண்டுதலின் பேரில் கூட இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் போலீசார் தொடர்ந்து பீர்பாலிடம் விசாரித்து வருகின்றனர்.  

2 வயது குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை: அதிர வைக்கும் வாக்குமூலம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், கொரனோ சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தாராளமாக நிதி வழங்குமாறு...

“இதை செய்து கொரோனாவை கட்டுப்படுத்துங்க” : ராமதாஸ் அட்வைஸ்!

சென்னையில் கொரோனா சோதனையை அதிகரித்து நிலைமையை விரைவாக கட்டுப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "...

ஒருவர் மூலமாக 400 பேருக்கு கொரோனா தொற்று பரவும்! அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா இரண்டாவது அலையில் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக மனிதர்களை தாக்க கூடிய கொடிய வைரஸ் உடம்பில் வேகமாக வளர்வதற்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதே காரணம் என்று...

கோவை மாநகர காவல் ஆணையராக தீபக்.எம்.டமோர் பதவியேற்பு!

கோவை கோவை மாநகர காவல் ஆணையராக தீபக்.எம்.டமோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வந்த சுமித்...
- Advertisment -
TopTamilNews