Home தமிழகம் 2வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்றக் கிளை எச்சரிக்கை!

2வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்றக் கிளை எச்சரிக்கை!

2011 ஆம் ஆண்டு கணவர் இறந்து விட்டார். ஆனால் கணவர் இறந்த பின்பு வழங்கக்கூடிய ஓய்வூதியம் உள்ளிட்டவை எனக்கு வந்து சேரவில்லை.

மதுரை: அரசு ஊழியர்கள் 2 வது திருமணம் செய்ததாகப் புகார் எழுந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

marriage

மதுரையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், காவல் உதவி ஆய்வாளராக இருந்த என் கணவர் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தனத்தை என்பது எங்களுக்குத் திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு  சமரச தீர்வு மையம் மூலமாக இரு குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதாகக் கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு சமரசம் செய்யப்பட்டது. இதையடுத்து  கடந்த 2011 ஆம் ஆண்டு கணவர் இறந்து விட்டார். ஆனால் கணவர் இறந்த பின்பு வழங்கக்கூடிய ஓய்வூதியம் உள்ளிட்டவை எனக்கு வந்து சேரவில்லை. இதனால் அதில் ஒரு பங்கு எனக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

hc

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசு ஊழியர்கள் மீது பல புகார்கள் வருவது அவர்கள் இறப்புக்குப் பிறகோ அல்லது ஓய்வுக்கு பிறகு தான் வெளிச்சத்திற்கு வருகிறது.  இரு திருமணங்கள் புரிவது நன்னடத்தை கிடையாது.அது  சட்டப்படி குற்றம்.இதை கருத்தில் கொள்ளாமல் பல அதிகாரிகள் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர். காவல் துறை அதிகாரி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதைச் சமரச தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது’ என்றார்.

sec

தொடர்ந்து அவரது தீர்ப்பில்,  உயரதிகாரிகள் இதுபோன்ற பிரச்சனைகளில் துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். தமிழக அரசு ஓய்வூதிய விதிப்படி மனைவிக்கு வழங்கப் பரிந்துரைக்கலாம். ஆனால் ஒரு முறை பதிவு செய்தால் மனைவி இறந்தால் தவிர வேறு காரணங்களுக்காக இதில் மாற்றம் செய்ய இயலாது. எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். இனிவரும் காலங்களில் அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம்  செய்ததாகப் புகார் வந்தால், அதில் தமிழக அரசின் நிர்வாகத்துறை செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார். 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
Do NOT follow this link or you will be banned from the site!