`பிளாக்வுட் அசத்தல்; வீழ்ந்தது இங்கிலாந்து!- அந்நிய மண்ணில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. பிளாக்வுட் அபாரமாக விளையாடி 95 ரன்கள் குவித்தார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பீதியில் மக்கள் இன்னும் மீளமுடியாத நிலையில், கிரிக்கெட் விளையாட்டை தொடங்கிவிட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரசிகர்கள் இல்லாமல் சௌத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மழை குறுக்கிட்டதால் முதல் நாள் போட்டியில் 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஹோல்டரின் வேகப்பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 43 ரன்னும், புட்லர் 35 ரன்னும், தொடக்க வீரர் புர்னஸ் 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹொல்டர் 6 விக்கெட்டும், கபிரியேல் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடி 318 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பிராத்வெயிட் 65 ரன்னும், டவ்ரிச் 61 ரன்னும், சாஸ் 47 ரன்னும் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஸ்டோக் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் சிபிலி ஆகியோர் நங்கூரமாக நின்று விளையாடு அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். சிபிலி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் கேப்ரில் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்ரில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் ஆர்சர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் வந்த பிளாக்வுட் அணியை சரிவிலிருந்து மீட்டு 95 ரன்கள் குவித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். முடிவில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

அத்துடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய கேப்ரில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நிறவெறிக்கு எதிராக இரு அணி வீரர்களும் “blacklivesmatter” என்ற வாசகம் பொறித்த ஜெர்சி அணிந்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Most Popular

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

புதுக்கோட்டையில் மேலும் 140 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,238ஆக அதிகரிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ராம பிரான் குறித்த சிந்தனை சில !

மகா விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் அதிக ஆகர்ஷம் மிக்கது ராமாவதாரம் . பிற அவதாரங்களை விட ராமருக்கு அதிக அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்லா ஊர்களில் கிராமங்கள் நகரங்கள் என்ற...